ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை .தடுக்க எளிய வழி.Valukkai Thalaiyil Mudi Valara

Valukkai Thalaiyil Mudi Valara eliya vazi. and varamal thadukka vazi.வழுக்கையை வருவதற்க்கு  முக்கியமான ஒன்று மரபணுக்கள். டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன்தான் உங்கள் தலைமுடியின் பலத்தை நிர்ணயிக்கும்.
பரம்பரையாக சிலருக்கு இந்த ஹார்மோன் பாதிப்பு ஏற்படுவதுண்டு. இதனால் சீக்கிரமே சொட்டை விழுந்துவிடும். பரம்பரையாகத்தான் இந்த சொட்டை ஏற்படுகிறது என்றில்லை யாருக்கும் ஏற்படலாம். ஆகவே வருமுன் காப்போம் என்ற மந்திரம் ஓதுவது நல்லதில்லையா.
தலை முடி இருக்கும்போதே ஒழுங்காக பராமரித்தால், உங்கள் அப்பாவிற்கு ஏற்பட்டது போல், சொட்டை உங்களுக்கும் உண்டாகாமல் தடுக்கலாம்.

இந்த சொட்டையை எப்படி தடுக்கலாம்? 
நீங்கள் தலைமுடியை நன்றாக பராமரித்தால், சொட்டை விழுவதை தடுக்கலாம். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சியுங்கள். உங்களுக்காக இங்கே கூறப்படும் குறிப்புகளை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்தினால் , நிச்சயம் சொட்டை விழுவதை தடுக்கலாம்.

வெந்தய சீரக பேஸ்ட் : 
வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சீரகம் 1 ஸ்பூன் போட்டு அதனை இரவில் ஊற வைத்துவிடுங்கள். மறு நாள் இந்த ஊறிய கலவையில் சிறிது கருவேப்பிலை கலந்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து த்துக் கொள்ளுங்கள்.
இதனை தலையில் தடவி 15 - 20 நிமிடங்கள் கழித்து , நன்றாக தேய்த்து தலைமுடியை அலசுங்கள். ஷாம்பு தேவையில்லை. வாரம் ஒரு முறை செய்தால் முடி அடர்த்தியாக வளரும். ஒருபோதும் முடி கொட்டாது.

கடுகு எண்ணெய் : 
கடுகு எண்ணெய் ஒரு கப் எடுத்து அதில் மருதாணி இலையை 4 டேபிள் ஸ்பூன் போட்டு, கொதிக்க வையுங்கள். நன்றாக கொதி வந்ததும் இந்த எண்ணெயை வடிகட்டி தலையின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து தினமும் தேய்த்து வந்தால் கூந்தல் வளர்ச்சி நன்கு தூண்டப்படும்.

வெங்காயம் மற்றும் தேன் பேஸ்ட் : 
வெங்காயத்தை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவிக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசலாம்.
வெங்காயத்திலுள்ள சல்ஃபர் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும். ரத்த ஓட்டத்தை தலையில் அதிகரிக்கச் செய்யும்.