கர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu

இரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியமும், இரும்பு சத்தும் அதிகம் இருக்கும் உணவு வகைகளை உண்பது நல்லது, தினசரி கீரை வகைகளில் ஏதாவது ஒன்று, பருப்பு, பால், தயிர் ஆகிய உணவு வகைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழ வகைகளில் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்தது, தினமும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் மலசிக்கல் பிரச்சினை வராமல் தடுக்கலாம். அசைவ பிரியர்கள் தினந்தோறும் ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம், அசைவ உணவுகளை உட்கொள்வதை பொருத்த மட்டில் கவணத்துடன் இருக்க வேண்டும், சிக்கன், மட்டன் மற்றும் மீன் வகைகளை சாப்பிடலாம், ஆனால் இவைகளை இரவு நேரத்தில் உண்பதை தவிர்ப்பதே நலம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு வழிமுறைகளில் மட்டுமல்லாது, தண்னீர் அருந்தும் விஷயத்திலும் அதிக கவணத்தோடு இருக்க வேண்டும், சுத்தமான தண்னீர் என்றாலும் அதை ஒரு முறை நன்றாக சூடுபடுத்திவிட்டு வடிகட்டி குடிப்பதே உடல் நலத்திற்கு சிறந்தது. கர்ப்ப காலங்களில் அசுத்தமான நீரை அருந்தினால் அது மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வருவதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்துவிடும்.
உணவருந்திய உடனே படுக்க செல்ல கூடாது, அப்படி செய்வது உடல் நலத்திற்கு அவஸ்தைகளையே தரும், உதாரனமாக உணவு உண்ட உடன் படுத்துக்கொண்டால் நெஞ்சை அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். சில பெண்களுக்கு பிரசவ காலம் நெருங்கும் எட்டாம், ஒன்பதாம் மாதங்களில் உடலில் நீர்கோர்த்து கை, கால்கள் வீங்கிவிடும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும், பார்லியை அதிக தண்னீரோடு கலந்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீர் சிறுநீராக வெளியேறி உடல் எடை குறையும்