height improve tips in tamil uyaramaga valara patti vaithiyam, உயரமாக வளர யோகா உயரமாக வளர என்ன சாப்பிட வேண்டும். உயரம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், உயரம் அதிகரிக்க சித்த மருத்துவம், உயரமாக வளர உடற்பயிற்சிஆண்கள் கவலை கொள்ளும் பல விசயங்களில் உயரமும் ஒன்று. குட்டையாக இருப்பதன் மூலம், மற்றவர்கள் கிண்டல் செய்வதால், தம்மீதுள்ள தன்னம்பிக்கையை இழக்கின்றனர். எனவே உயரமாக வளர வேண்டுமானால், உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் என ஒரு சில விசயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். உயரமாக பின்பற்ற வேண்டிய சில விசயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதன. இவற்றை முறையாக கடைபிடிப்பதன் மூலம் ஒரே மாதத்தில் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம்.
டயட்
காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமின்றி, பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் தான் எலும்புகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் அதிகம் உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சீஸ், தயிர், பன்னீர் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.
தண்ணீர்
காப்ஃபைன், கார்போனேட் பானங்கள் போன்றவற்றை தவிர்த்து, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் மற்றும் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
போதுமான தூக்கம்
தூங்கும் போது, பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படுவதோடு, உடலும் வளர்ச்சியடையும் . எனவே உயரமாக, உடலுக்கு போதிய ஓய்வை வழங்க வேண்டும். அதிலும் சிறுவயதிலேயே 8-11 மணிநேர ஆழமான தூக்கத்தைக்கொண்டால், ஒருவர் நல்ல உயரமாக வளர முடியும்.
சிம்பிளான உடற்பயிற்சிகள்
ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதைத்தவிர்த்து, விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபட்டால், உடல் நன்கு வளர்ச்சி அடையும். அதிலும் கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து, கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல் போன்றவற்றை விளையாடுவது மட்டுமின்றி, ஸ்கிப்பிங், கம்பியில் தொங்குவது போன்றவையும், உயரமாவதற்கு உதவி புரியும்.
யோகா
யோகாக்களில் உயரத்தை அதிகரிப்பதற்கான யோகாக்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றைப்பின்பற்றினால், உயரமாகலாம். யோகாவில் தடாசனம் உயரமாவதற்கு உதவும். ஆகவே உங்கள் குழந்தைகளை சிறு வயதிலேயே யோகாக்களில் ஈடுபடுத்துங்கள்.