கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என சொல்வது ஏன் தெரியுமா? kal mel kal podddu irukkalama


‘கால் மேல் கால் போட்டு உட்காராதே... இது என்ன கெட்ட பழக்கம்?’ - இப்படி பெரியவர்கள் கூறுவதைப் பார்த்திருப்போம்.  பெரியவர்கள் எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில்  அப்படிச் சொன்னாலும், அதன் பின்னணியில்  ஆரோக்கியம் சார்ந்த அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

‘லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில்  பணிபுரியும் போது சிலர் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். இவ்வாறு உட்கார்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கால் மேல் கால் போட்டு உட்காரும் போது, சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம்  2  சதவிகிதமும் அதிகரிக்கிறதாம். அது மட்டுமே அல்ல... அடிக்கடி காலை குறுக்கே போட்டு உட்கார்வதால் இடுப்பு எலும்புகளின்  இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை  வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் வெரிகோஸ் வெயின் எனப்படுகிற நரம்புப் பிரச்னை வரவும் வழிவகுக்கிறது.

10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் கால்களை குறுக்கே போட்டு உட்காரக்கூடாது’ என்று இதயநோய் நிபுணரான டாக்டர்  ஸ்டீபன் சினட்ரா கூறுகிறார். முக்கியமாக... நீரிழிவுக்காரர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர். சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.
.
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை.
.
நாளிடைவில் இது கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுகிறது.
.
நீண்ட நேரம் கால் மீது கால் வைத்து உட்காரும் பெண்கள் இனிமேலாவது கவனமாக இருங்கள்...!!!

பெரியவர்கள் சொன்ன ஒவ்வொரு அறிவுரையுமே அர்த்தமுள்ளதாக இருப்பது நமக்கு புரிய வருவது உண்மைதானே!