சமைத்த உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லதில்லையோ, அதே போல் நாம் வாங்கும் முட்டையையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
தற்போது குளிர்சாதனப் பெட்டி என்ற ஒன்று வந்ததும், பல ஆண்கள் மிகவும் வருத்தப்படுகின்றனர்.
ஏனெனில் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் சமைத்த உணவுகள் அனைத்தையும் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது.
இதனால் உடலுக்குத் தீங்கு விளையும். எப்படி சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லதில்லையோ, அதே போல் நாம் வாங்கும் முட்டையையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
உண்மையிலேயே இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும். ஆனால் அதுவே உண்மை. அது ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதனைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.
விரைவில் கெட்டுப் போகும் :-அறைவெப்பநிலையில் வைத்துப் பராமரிக்கும் முட்டைகளை விட, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப் போய்விடுமாம்.
அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப் போல் திரிந்துவிடுகின்றதாம்.
எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்துச் சாப்பிடுங்கள் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரியுங்கள்
எனவே இதனைத் தவிர்க்க வேண்டுமெனில், அறைவெப்பநிலையிலேயே பராமரியுங்கள்.
கேக் செய்ய முடியாது:- ஒருவேளை நீங்கள் முட்டையைப் பயன்படுத்தி கேக் செய்ய நினைப்பவராயின் அதனைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பராமரிக்காதீர்கள்.
முட்டை கெட்டுப் போய்விட்டதை அறியும் சோதனை:- நீங்கள் வாங்கிய முட்டை பழுதாகாமல் உள்ளதா அல்லது கெட்டுப் போயுள்ளதா என்பதை அறிய, ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் முட்டையைப் போட்டு, முட்டை மிதந்தால், அந்த முட்டை கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தம்.

